Face Book LIKE

Saturday, September 15, 2007

வரம் தருவாய் வாரணனே

வரம் தருவாய் வாரணனே!
(ராகம்:ஹம்ஸத்வனி)

வரம் தருவாய் வாரணனே!
வலம்புரி விநாயகனே - எனக்கொரு (வரம்)

உலகம் புரந்திடும் உமையாள் மகனே
உருவான ப்ரணவத்தில் உறைபவனே
திருவான வேதங்கள் தொழுதிடும் தேவனே
திருமால் மருகனே திவ்யஸ்வ ரூபனே (வரம்)

ஆணவம் கன்மம் மாயைகள் அழிப்பாய்
அருட்கடல் தனிலே எமைமூழ் கடிப்பாய்
அன்பெனும் உருவே அருள்தரும் சுடரே
ஆதியும் அந்தமும் இல்லாப் பொருளே

அகம் குழைந்துன் பதம்நினைந் திடும்
கணம் தனில்கண் மலர் மலர்ந்திடும்
அறம் வளர்த்திடும் திறம் கொடுத்திடும்
அழகிய் திருக்கரம் அணைத் தெடுத்திடும் (வரம்)

Saturday, August 18, 2007

செந்தூர் வடிவேலா!

Raga : Bagesree Lyrics:Balaji 20.04.2005

செந்தூர் வடிவேலா
சிந்தைநிறை பாலா
வந்தனை புரிவோரை
வாழவை க்கும்சீலா (செந்தூர்)

அந்தகாரம் நிறைந்த
அகத்தினில் ஒளி கூட்ட
அகங்காரம் செறிந்த
அறிவினைத் தெளிவாக்க
எந்தக்கா லமும்உந்தன்
அன்புக்கு நான்ஏங்க
ஏக்கங்கள் தனைப்போக்க
என்றென்றும் நீகாக்க (செந்தூர்)

மன்பதை காக்கின்ற
மந்திரம் உன்நாமம்
மங்களங்கள் நல்கும்
செந்திருப் பொற்பாதம்
வந்திடும் அடியார்க்கு
வரமருளும் நேயம்
செந்தூர்க் கடலோரம்
சேவிப்போம் திருக்கோலம் (செந்தூர்)

Thursday, August 16, 2007

ஓடிச்சலித்த பின்னே....

ஓடிச்சலித்த பின்னே....
-------------------------


ஓடிச்சலித்த பின்னோர்
ஓரத்தே அமர்ந்து கொண்டு,

ஓடிவந்த பாதைகளை
நினைவுகளில் அசைபோட்டு
ஒவ்வொன்றாய் ஒவ்வொன்றாய்
உணரத் தலைப்பட்டேன்!

எத்தனை பேருக்கு
என்னால் உபகாரம்?
எத்தனை உள்ளத்தில்
என் செயலால் பாதிப்பு?

எண்ணங்கள் எழுதிவந்த
எழிற்கோலம் சிலகாலம்....!

எதிராளி உளக்கோலம்
சிதைக்கின்ற சுடுசொற்கள்
நானுரைத்து, நல்லவரின்
நிம்மதி பறித்ததுண்டோ?

நல்லதென நான் நினைத்து
உரைத்திட்ட மொழியெல்லாம்
நாலுபேர் மனங்களிலே
நாயகமாய் நின்றதுண்டோ?

நாளுக்கோர் நினைவாய்
நன்மைகளே கனவுகளாய்,
நாளைய கனவுகளின்
நனவுக்கு நிதமேங்கி,
நெஞ்சம் நலிகின்ற
நேரத்தில் பாட்டிசைத்து
வஞ்சம் நெஞ்சத்தில்
தங்காத வரம் வேண்டி,

வாழ்வுச் சுமை நீங்க
வாயார உரையாடி
உள்ளம் புன்னகைக்க
உள்ளோர் சிரித்திருக்க,
ஒவ்வோர் வார்த்தையிலும்
உண்மை நிலைத்திருக்க
உரையாடி, உறவாடி
வாழ்ந்திருந்த காலமெலாம்.......

எங்கோ ஒளிந்திருந்து
எனைக் கேலி பேசிடுதே!
என்னை ஏறெடுத்துப்
பார்த்திடவும் நாணிடுதே!

***** --பாலாஜி--
24.07.1981

Saturday, July 28, 2007

ராம ராம ராம ராம



ராகம்:திலங்க்
பாடல்:பாலாஜி

ராம ராம ராம ராம
ராம என்று சொல்லுவாய்-மனமே (ராம)

வேதமூர்த்தி நாதமூர்த்தி
வினைகள் தீர்க்கும் ராமமூர்த்தி
பாதகீர்த்தி தனை நினைந்து
பணிந்து பணிந்து போற்றுவாய் (ராம)

நெஞ்சில் என்றும் நிலைக்கும் நாமம்
நினைக்கும் போதே இனிக்கும் நாமம்
அஞ்சல் அகற்றிக் காக்கும் நாமம்
ஆறுதலைத் தான் அளிக்கும் நாமம் (ராம)

கஜமுகனை வேண்டினேன் !


ராகம்:ஹம்ஸத்வனி
பாடல்:பாலாஜி

கஜமுகனை வேண்டினேன்
கணம் கணம் நினைந்துருகும்
மனங்களில் நிலைத்தருளும் (கஜமுகனை)

முன்னைப்பழம் பொருளோன் மூவுலகாதாரன்
முறைகளைக் கேட்டருளி வரம்தரு மோர்சீலன்
மூவரும் யாவருமே முதல்நினை சிவபாலன்
முனிவர்கள் தொழும் வேதம் வணங்கிடும்குரு நாதன்
(கஜமுகனை)

இனிமைக்கு மறுபெயரோன் இகபரசுகம்தரு வோன்
ஈடிணை இல்லாதோன் எங்கெங்கும் நிறைந்திடுவோன்
தங்கு தடையின்றி மங்களங்கள் அருள்வோன்
தாமரை மல்ர்க் கழல்கள் சரண்புகுந் தேன்நானும்
(கஜமுகனை)

Friday, July 27, 2007

A Tribute to 'Kshipra Prasadha Ganapathi" க்ஷிப்ரப்ரஸாத கணபதி !



According to Hindhu tradition, before starting anything afresh, a Prayer invocating Lord Ganesha is offered. It is because of the belief that Lord Ganesha,The Protector, when prayed first, protects the Project and leads us to the path of Victory. Likewise, I also started this Blog with a song presented to me by Lord Ganesha in Tamil on October 01 1990, which is given at the bottom of this page, next to the following video. This video is again a song in praise of Lord Ganesha, written by Saint ARUNAGIRINATHAR, about six centuries ago!



க்ஷிப்ரப்ரஸாத கணபதி

பாடல் : பாலாஜி
ராகம் : ஆபோகி

க்ஷிப்ரப்ரஸாத கணபதி
தினம் பணிந்தேன் உந்தன் திருவடி
திருவிழி மலர்கள் திறந்திட இன்னும்
தாமதமேனோ அருள்புரி........(க்ஷிப்ர)

ஓமெனும் ப்ரணவத்துள் உறைபவனே
உயிரினம் தழைத்திட ஒளி தருபவனே
கரிமுகவதனா கருணாநிதியே
கந்தனின் தமையா கலியுகபதியே
....(க்ஷிப்ர)

ஈரேழுலகும் இசைவடிவாக
இன்னிசைதனிலே நீயுருவாக
நர்த்தனமாடி நல்லவை சேர்க்க
நாட்டிய கணபதி தாள் பணிந்தேனே
....(க்ஷிப்ர)

Transliterated in English as requested by a viewer:
Ragam: ABHOGHI

Kshipra prasAdha gaNapathi
dhinam paNindhEn undhan thiruvadi  (2)
thiruvizhi malargaL thirandhida innum
thAmatha mEnO aruL puri    (kshipraprasAdha gaNapathi)

Om enum praNavaTHuL uRaibavanE
uyirinam thazhaiTHida oLitharu bava nE (2)
     karimukha vadhanA karuNA nidhiyE
     kandhanin thamaiya kaliyuga pathi yE    (kshipraprasAdha gaNapathi)

eerE zhulagum iSaivadi vaaga
inniSai thanilE neeyuru vaaga (2)
narTHana maadi nallavai SErkka
nAttiya gaNa pathi thaaLpaNin dhEnE      (kshipraprasAdha gaNapathi)

One can hear this song in the following video (from 3.01 to 7.50) which is sung by late Smt. Shantha Srinivasan , an ex-All India Radio Artist (Chennai) of yester-years.

Kshipra prasAdha gaNapathi