Face Book LIKE

Thursday, October 29, 2009

இனிமைப் பத்து, an almost translation of Madhurashtakam





The famous "Madhurashtakam" in Sanskrit was written by Shri Vallabhacharya . Madhurashtakam speaks about the eternal beauty of Lord Krishna . It tells that each and every part of HIM is so SWEET (Madhuram). It ironically means that finally the union with the LORD is Eternal Bliss, which is not so easy without constant trial for the same !

Here goes the video song of Original 'Madhurashtakam'  with Music and Orchestra composed in a different style, with a wonderful rendition . A very melodious and enjoyable one !

Music: Arun GS Orchestration: Vid. K V Krishna Prasad Vocals: Nagendra R

https://www.youtube.com/watch?v=vWH5kAnolKg

Following is the Madhurashtakam (I call it "Inimai Pathu") written by me in TAMIL. I won't say it is a full translation, but the original one in Sanskrit is the inspiration for this!

இனிமைப் பத்து !

உதடுகள் இனிமை உருவம் இனிமை
கண்கள் இனிமை காட்சியும் இனிமை
உள்ளம் இனிமை எண்ணமும் இனிமை
இனிமையின் தலைவன் இனிமைக்கு இனிமை

திருமுகம் இனிமை திருமுடி இனிமை
திருமுடி தனிலே பீலியும் இனிமை
திருநெற் றியிலே திலகமும் இனிமை
இனிமையின் தலைவன் இனிமைக்கு இனிமை

திருமுகம் தனிலே இருவிழி இனிமை
இருபுறம் ஆடும் குண்டலம் இனிமை
இரவின் நிறத்தில் இது ஒரு இனிமை
இனிமையின் தலைவன் இனிமைக்கு இனிமை

கோமள வதனத்தில் கொழிப்பது இனிமை
கொஞ்சிடும் கண்களின் மொழியோ இனிமை
குயிலே நாணும் குரலில் இனிமை
இனிமையின் தலைவன் இனிமைக்கு இனிமை

துளசி மணிமலர் மாலை இனிமை
துலங்கும் பீதாம் பரமோ இனிமை
துவளும் அரைஞாண் ஒளியே இனிமை
இனிமையின் தலைவன் இனிமைக்கு இனிமை

இலங்கும் கைகால் அணிகலன் இனிமை
இடக்கை தனிலே குழலோ இனிமை
உருகா வெண்ணெய் ஒருகரத் தினிமை
இனிமையின் தலைவன் இனிமைக்கு இனிமை

திருப்பா தங்களில் சலங்கை இனிமை
சலங்கையின் சப்தம் தனிலோ ரினிமை
குழந்தை இனிமை குவலயம் இனிமை
இனிமையின் தலைவன் இனிமைக்கு இனிமை

சுதர்சன சக்கரஒளிதரும் இனிமை
சுற்றிலும் எங்கும் சங்கொலி இனிமை
திருவிளக் கிலங்கும் எழிலே இனிமை
இனிமையின் தலைவன் இனிமைக்கு இனிமை

ஆயர் பாடியின் அழகே இனிமை
அதில்விளை யாடிடும் ஆயன் இனிமை
கோபியர் இனிமை கோகுலம் இனிமை
இனிமையின் தலைவன் இனிமைக்கு இனிமை

அவன்நினை வினிமை அவன்பெயர் இனிமை
அவன்நினை வினிலே வரும் இசை இனிமை
அவனருள் இனிமை அகிலமும் இனிமை
இனிமையின் தலைவன் இனிமைக்கு இனிமை


--March 15 1991 K.Balaji  

Transliterated in Malayalam :
ഇനിമൈപത്തു

ഉദടുകൾ ഇനിമൈ  ഉരുവം ഇനിമൈ 
കൺകൾ  ഇനിമൈ  കാക്ഷിയും ഇനിമൈ
ഉള്ളം ഇനിമൈ എണ്ണമും ഇനിമൈ
ഇനിമൈയിൻ തലൈവൻ ഇനിമൈക്കു ഇനിമൈ 

തിരുമുഖം ഇനിമൈ തിരുമുടി ഇനിമൈ
തിരുമുടി തനിലേ പീലിയും ഇനിമൈ
തിരുനെട്രിയിലെ തിലകമും ഇനിമൈ
ഇനിമൈയിൻ തലൈവൻ ഇനിമൈക്കു ഇനിമൈ 

തിരുമുഖം തനിലേ ഇരുവിഴി ഇനിമൈ
ഇരുപുറം ആടും കുണ്ടലം ഇനിമൈ 
ഇരവിൻ  നിറത്തിൽ ഇതു ഒരു ഇനിമൈ
ഇനിമൈയിൻ തലൈവൻ ഇനിമൈക്കു ഇനിമൈ 

കോമള വധനത്തിൽ കൊഴിപ്പതു ഇനിമൈ
കൊഞ്ചിടും കണ്കളിന് മൊഴിയോ ഇനിമൈ
കുയിലേ നാണും കുരലിൽ ഇനിമൈ
ഇനിമൈയിൻ തലൈവൻ ഇനിമൈക്കു ഇനിമൈ 

തുളസി മണിമലർ മാലൈ ഇനിമൈ
തുലങ്കും പീതാം പരമോ ഇനിമൈ
തുവളും അറൈഞാൺ ഒളിയേ ഇനിമൈ
ഇനിമൈയിൻ തലൈവൻ ഇനിമൈക്കു ഇനിമൈ 

ഇലങ്കും കൈകാൽ അണികലൻ ഇനിമൈ 
ഇടക്കൈ തനിലേ കുഴലോ ഇനിമൈ 
ഉരുകാ വെന്ന്ണെയ് ഒരുകരത്തിനിമൈ 
ഇനിമൈയിൻ തലൈവൻ ഇനിമൈക്കു ഇനിമൈ 

തിരുപ്പാ ദങ്കളിൽ  ശലങ്കൈ ഇനിമൈ
ശലങ്കൈയിൻ ശബ്ദം തനിലോ റിനിമൈ 
കുഴന്തൈ ഇനിമൈ കുവലയം ഇനിമൈ 
ഇനിമൈയിൻ തലൈവൻ ഇനിമൈക്കു ഇനിമൈ 

സുദർശന ചക്കര ഒളി തരും ഇനിമൈ 
ചുട്രിലും എങ്കും ശങ്കൊലി ഇനിമൈ
തിരുവിളക്കിലങ്കും എഴിലേ ഇനിമൈ
ഇനിമൈയിൻ തലൈവൻ ഇനിമൈക്കു ഇനിമൈ 

ആയർ പാടിയിൻ അഴകേ ഇനിമൈ
അതിൽവിളൈ യാടിടും ആയൻ ഇനിമൈ 
ഗോപിയർ ഇനിമൈ ഗോകുലം ഇനിമൈ 
ഇനിമൈയിൻ തലൈവൻ ഇനിമൈക്കു ഇനിമൈ 

അവൻനിനൈ വിനിമൈ അവൻപെയ റിനിമൈ 
അവൻനിനൈ വിനിലേ വരും  ഇസൈ ഇനിമൈ 
അവനരുൾ ഇനിമൈ  അഖിലമും  ഇനിമൈ 
ഇനിമൈയിൻ തലൈവൻ ഇനിമൈക്കു ഇനിമൈ 


----കേ.ബാലാജി 


No comments: