வளங்களை அருளும் லக்ஷ்மி வருவாயே
This is a Tamil Translation done by me of the famous 'Bhagyadha lakshmi baramma' wriiten in Kannada by Purandara Dasaru.
A link of the Kannada Song is given below so that the tamil version can be sung in the same tune .
https://www.youtube.com/watch?v=Kk_qZOL7R3w
வளங்களை அருளும் லக்ஷ்மி வருவாயே
என் தாயே
வளங்களை அருளும் லக்ஷ்மி வருவாயே ! (வளங்களை)
திருவடித் தாமரை திருவாய் மலரத்
திருவடிச் சலங்கை மணியாய் மொழிய
தவத்திரு வடியார் பூஜிக்கும் வேளையில்
கடைந்திடும் தயிரில் திரளும் வெண்ணைபோல் (வளங்களை)
பொன்மழை தனையே பொழிந்திட வாராய்
என்மனை மனமும் விளங்கிட வாராய்
கதிரவ னொளியா யருட்கதிர் வீசிட
ஜனகனின் மகளாம் ஜானகி வாராய் (வளங்களை)
சுத்த மனத்துடன் பக்தியில் திளைத்திடும்
பக்தரின் மனைகளில் நித்திய மங்கலம்
சத்தியம் போற்றும் சான்றோ றவர்களின்
சித்தம் நிறைந்திடும் புத்தொளியே நீ (வளங்களை)
அளவே யில்லா வரங்களை அருள்வாய்
வளையிட்ட கைகளால் ஆசிகள் அருள்வாய்
குங்கும நாயகி பங்கயக் கண்ணி
வேங்கட ரமணனின் செங்கமலத் திரு (வளங்களை)
இனிப்புச் சர்க்கரை நெய்கலந் தாற்போல்
இனியதோர் வெள்ளியில் பூஜா வேளை
அந்த மிக்கநின் அழகிரி ரங்கனின்
அருள்கொண் டெமையே ஆண்டிட வருவாய் (வளங்களை)
---K.Balaji
December 15 2015 12 pm