சாம்பல் கவிந்த செந்தழல் !
உலர்ந்து வீழும் இலைச் சருகும்
உடனே உலரும் பனித்துளியும்
ஒருவர் மனதிலும் நிற்பதில்லை
ஒருவித சலனமும் தருவதில்லை
இலைச் சருகும் பனித்துளியும்
இயன்ற பயனைத் தந்த பின்னும்
தம்முள் தாமே எரிந்தவியும்
தம்முள் தாமே நொந்தழியும்
ஊமை கண்ட கனவைப் போலும்
பாலையிற் பெய்த நிலவைப் போலும்
வெளியே என்றும் தெரியாது
வேதனை மாத்திரம் மறையாது !
கி.பாலாஜி
01.11.2018