சிந்தைச் சித்து
மரம் விட்டு விலகும் கனி போலே
மனம் விட்டு விலகும் நிலை வேண்டும்
மந்திரம் சாற்றும் பொருள் கேட்டேன்
மயக்கம் அறுத்த வரம் கேட்டேன்
கிடைத்தது போதும் என நினைத்து
மகிழும் இக்கணம் நிலைத்திடட்டும்
மாநில மக்கள் அனைவரிலும்
இந்த நிம்மதி பரவிடட்டும்
மனமோ சற்றும் ஓயாது
மாயாமோகம் விலகாது
மந்திரம் எண்ணம் எல்லாமே
மயங்கும் அக்கணம் மாத்திரமே !
என்னே இந்த விந்தையிது
எண்ணிலடங்காச் சிந்தையிலே!
பண்ணுவதெல்லாம் பரமா நின்
பார்வையில் விளைந்த தத்துவமே!
--கி.பாலாஜி
05.01.2019