மகளிர் தமை தெய்வமென
மதிக்கும்நம் நாட்டினிலே
அம் மகளிர்க் கோர்தினத்தைக்
குறித்துவைத்துக் கும்பிடலோ !!
பிறநாட்டுப் பண்பாட்டைப்
பின்பற்றும் வழிப்பட்ட
நம்மவரின் சீலமிது
காலத்தின் கோலமிது !
ஊரோடு ஒத்தேநாம்
வாழ்கின்ற பண்புடையோம்
வாழ்த்து கிறோம் மகளிர்தமை
மகளிர் தின நன்னாளில் !
அரிவையரே ஆள்பவர்கள்
அமைதியினை அளிப்பவர்கள்!
அகிலத்தில் சிறப்பெல்லாம்
அரிவையரைப் போற்றுதலால் !
மகளிர் தமை மனமார
மதித்திடவே கற்றிடுவோம்
மரபுதனைக் காத்திடுவோம்
மதிப்பனைத்தும் பெற்றிடுவோம் !
மகளிர் தின நல் வாழ்த்துக்கள் !
-- கி.பாலாஜி
08.03.2019