ராகம்:ஹம்ஸத்வனி
பாடல்:பாலாஜி
கஜமுகனை வேண்டினேன்
கணம் கணம் நினைந்துருகும்
மனங்களில் நிலைத்தருளும் (கஜமுகனை)
முன்னைப்பழம் பொருளோன் மூவுலகாதாரன்
முறைகளைக் கேட்டருளி வரம்தரு மோர்சீலன்
மூவரும் யாவருமே முதல்நினை சிவபாலன்
முனிவர்கள் தொழும் வேதம் வணங்கிடும்குரு நாதன்
(கஜமுகனை)
இனிமைக்கு மறுபெயரோன் இகபரசுகம்தரு வோன்
ஈடிணை இல்லாதோன் எங்கெங்கும் நிறைந்திடுவோன்
தங்கு தடையின்றி மங்களங்கள் அருள்வோன்
தாமரை மல்ர்க் கழல்கள் சரண்புகுந் தேன்நானும்
(கஜமுகனை)
No comments:
Post a Comment