மௌன நாதம்
சம்போ மஹாதேவ தேவா - சிவசம்போ மஹாதேவ தேவேச சம்போ (சம்போ)
அலைபாயும் மனமிந்த நேரம் - சிவ
சம்போ வென்றுன்பா தம் தனை நாடிப் போகும்
அன்பேதா னுருவான தெய்வம் - நீ
அணைப்பா யென்றறிவேனுன் துணைநாடி வந்தேன் (சம்போ)
எங்கெங்கு சென்றாலும் உள்ளே - சிவ
சம்போசம் போவென் றுன் நாம மொன்றே
ஓமென்ற ஒலியாகிப் பெருகும் - என்னில்
பலநாளாய் விளங்காத பொருளெல்லாம் விளங்கும் (சம்போ)
ஐந்தெழுத்து மந்தி ரம்நாதம் - மௌன
குருவாகி உபதேசம் செயவந்த வேதம்
வரவேண்டும் வரவேண்டும் ஞானம் - அது
வந்தால்பின் னெதுவேண்டும் எனவேண்டும் மௌனம் (சம்போ)
2 comments:
அருமை.. வளரட்டும்.
மிக்க மகிழ்ச்சி. நன்றி.
Post a Comment