மணக்குள விநாயகனே
மனத்துள் நீ நாயகனே
மந்திரப் பொருளோனே
மங்களம் அருள்வோனே (மணக்குள)
எருக்கம் பூவிற்கும் ஏற்றம் தந்தாய்
எதிர்ப் படுவோர்க்குத் துணிவைத் தந்தாய்
சூட்டிய மாலையில் சுடரொளித் தோனே
சுந்தரன் மகனே சுகம் தருவோனே
(மணக்குள)
செம்மலர்ப் பதம்நாடி வந்தனை புரிந்தே
வந்துனைத் துதிப்போர்க்கு வாழ்வளிப் பவனே
இம்மெனும் முன்னே ஈந்தனை வரம்நீ
இகபரம் இரண்டுக்கும் இனியொரு துணைநீ
(மணக்குள)
(K Balaji October 25 1989 11pm)
No comments:
Post a Comment