உறங்குவதாய் நடிக்கிறேன்
ஊம்ஹூம்...
ஒன்றும் புண்ணியமில்லை!
மேலும் உலுக்கப் படுகிறேன்
உறங்குவதாக நடித்தவன்
இப்போது
விழித்தவனாய் நடிக்கிறேன் !
நான் விழித்துக் கொண்டு விட்டேன் !
இவர்களது உலுக்கலோ
இன்னும் தொடர்கிறது !!
விலையறியாப் பதர்களிடம்,
விலைபோகா விஷயங்களை
விற்றுவிடப் பார்க்கிறார்கள் !
கல்லிலே நார் உரிப்பேன்
மணலைக் கயிறாய்
நான் திரிப்பேன்
என்று
சொல்லாலே பந்தல் போட்டால்
செயலுக்கு முடிவு ஏது??
கி.பாலாஜி
27.12.2019
மாலை 4.445
No comments:
Post a Comment