இருக்கிறேன்;
உரிக்க உரிக்க
'நான்'
இன்னும் வலுக்கிறது ;
இன்னும் ஒரு சுற்றுப்
பருக்கிறது !
இன்னும் உரிக்கிறேன்
இறுதிவரை சோராமல் !
கொஞ்சம் கொஞ்சமாய்
சோர்கிறது 'நான்'!
குத்துமதிப்பாய்
ஒரு முற்றுப்புள்ளி ஆகிறது!
முற்றிலும் களைந்துவிட
முயன்றுதான் பார்க்கிறேன் !
ஆனாலும்
'புள்ளி' ஒரு 'வெள்ளி'யாக
மிளிர்கிறது !
கடுகு சிறுத்தாலும்
போகுமா காரம் !!
--கி. பாலாஜி
27.12.2019
மாலை 4 மணி
No comments:
Post a Comment