வரம் தருவாய் வாரணனே!
(ராகம்:ஹம்ஸத்வனி)
வரம் தருவாய் வாரணனே!
வலம்புரி விநாயகனே - எனக்கொரு (வரம்)
உலகம் புரந்திடும் உமையாள் மகனே
உருவான ப்ரணவத்தில் உறைபவனே
திருவான வேதங்கள் தொழுதிடும் தேவனே
திருமால் மருகனே திவ்யஸ்வ ரூபனே (வரம்)
ஆணவம் கன்மம் மாயைகள் அழிப்பாய்
அருட்கடல் தனிலே எமைமூழ் கடிப்பாய்
அன்பெனும் உருவே அருள்தரும் சுடரே
ஆதியும் அந்தமும் இல்லாப் பொருளே
அகம் குழைந்துன் பதம்நினைந் திடும்
கணம் தனில்கண் மலர் மலர்ந்திடும்
அறம் வளர்த்திடும் திறம் கொடுத்திடும்
அழகிய் திருக்கரம் அணைத் தெடுத்திடும் (வரம்)
No comments:
Post a Comment