Face Book LIKE
Monday, October 26, 2009
கருணை உள்ளம் !
ராகம் : ஹிந்தோளம் பாடல் : பாலாஜி
கண்களில் தெரியுது கருணை உள்ளம்-அவள்
கரங்களின் மூலம் காவல் பலம்
உள்ளத்தில் பெருகுது உவகையின் ஊற்று
உமையாம்பிகயின் நாமத்தைப் போற்று
(கண்களில்)
போற்றிடும் நாமமே சொல்லிடும் சேதி
போகும் வழியே புண்ணிய வீதி
ஸர்வமும் அவளே என்று நீ ஓதி
சக்தியின் பெயர் சொன்னால் செத்திடும் பீதி
(கண்களில்)
உள்ளம் உருகி உமைதனை நினைப்பாய்
உலகம் காக்கும் பரம்பொருள் அவளே
கல்லினுள் தேரை கருப்பையில் உயிரை
காவல் கரம் கொண்டு காப்பவள் அவளே
(கண்களில்)
காக்கும் சக்தியின் கடைவிழிப் பார்வை
கவலைகள் நீக்கும் காலமாம் போர்வை
காலமாம் சக்தியும் கமலாம்பிகை கையில்
வினைகள் அகலும் விமலையைத் துதிக்கையில்
(கண்களில்)
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment