"Bhaja Govindham"
As anyone knows, "Bhaja Govindham" is the famous hymn by ADHI SHANKARACHARYA, the Great Master of the ADVAITHA principle of Philosophy! 'Advaitha' means 'that which is not 'Dhwaitha (TWO)! As per his principle there are no two different things about the 'Atman', that is 'Soul'. Birth,Death,Process of Life in this world, everything is a myth! By constant practice of chanting the name of THE LORD and by anchoring our mind on HIM, at one point of time, the soul attains salvation, understanding what is ONENESS! All through the hymn, it sanctifies the significance of chanting the name of The Lord Govindha!
You can enjoy the beautiful original version in Sanskrit , sung by Dr M S Subbulakshmi in her melodious voice, by clicking the following link !
Bhaja Govindam by M.S.Subbulakshmi
Following is my humble presentation in Tamil. I won't say it is a translation and I am too meagre a person for the task. It is just an inspiration of the original thought!
பஜ கோவிந்தம்
கோவிந்தனை நினை கோவிந்தனை நினை
கோவிந்தனை நினை மூடமனதே
இலக்கண அறிவால் பயனொன்றில்லை
இறையறி வொன்றே இறுதியில்துணையாம் (கோவிந்தனை நினை)
தனம்பெற வேண்டும் தணியாதாகம்
தனைவிட் டொழிப்பாய் சஞ்சலமனமே
ஆசைகளின்றி அற்புதம் காண்பாய்
அடைந்ததைக் கொண்டே ஆவல்தணிப்பாய் (கோவிந்தனை நினை)
மாதரின் மீதுறும் மயக்கம் மறுப்பாய்
மங்கைய ருடல்வெறும் மாமிச மன்றோ
கண்களை மறைக்கும் காமத்தை அழிப்பாய்
உண்மையின் அறிவே உன் நலம் அறிவாய் (கோவிந்தனை நினை)
தாமரை யிலையில் தண்ணீர் போலே
நிலயற்ற வாழ்வே நிலையிந்த உலகில்
தணியா தாகம் சோகம் நோயென
அனைத்தும் துளைக்கும் அழிவுறும் வாழ்விது (கோவிந்தனை நினை)
காசும் பணமும் கையிருக்கும் வரை
காலைச் சுற்றிடும் ஆயிரம் உறவு
கைப்பொருள் தீர்ந்து தேகமும் தளர்ந்தால்
கலைந்திடும் உறவுகள் மெய்ப்பொருள் அறிவாய் (கோவிந்தனை நினை)
காயத்தினுள்ளே காற்றுள்ள வரைதான்
கவலை கருத்து காரியம் எல்லாம்
காற்றுப் பிரிந்தால் காயம் கண்டே
கட்டிய மனைவியும் கலக்கம் கொள்வாள் (கோவிந்தனை நினை)
பிள்ளைப் பருவம் வெறும்விளை யாட்டில்
பருவம் வந்தால் பாலுணர்வே தான்
மூப்புக் காலம் முழுதும் கவலையில்
மூடமனிதனுக் குணர்விலை இறையில் (கோவிந்தனை நினை)
மனைவியும் மக்களும் யாரென நினைப்பாய்
எங்கிருந் தாய்நீ ஏனிங்கு வந்தாய்
விசித்திர உறவுகள் விளக்கம் அறியாய்
வீடுபே றென்பதை இனிநீ நினைப்பாய் (கோவிந்தனை நினை)
மறுபடி மறுபடி பிறப்பும் இறப்பும்
மறுபடி மறுபடி கருவினி லுறக்கம்
முடிவொன் றிலையிவ் வாழ்வின் வண்ணம்
முயன்றா லருள்தரும் முகுந்தன் திண்ணம் (கோவிந்தனை நினை)
நல்லோர் உறவால் பற்றினை ஒழிப்பாய்
பற்றின் மையினால் மாயைக ளழிப்பாய்
மாயைக ளொழிந்திட உண்மைகள் விளங்கும்
உண்மைகள் விளங்கிட உயிர்வீ டடையும் (கோவிந்தனை நினை)
வயதும் கூடிட வாலிபம் மறையும்
வற்றிடு நீரால் ஏரியும் காயும்
செல்வம் சென்றால் சேர்ந்தோர் மறைவார்
உண்மையை உணர்ந்தால் உறவுகள் மறையும் (கோவிந்தனை நினை)
தானெனும் அகந்தை தனைநீ மாற்று
தன்னுடை மைகள் எனும்நினை வகற்று
அனைத்தயும் காலம் அழித்திடும் உணர்ந்து
அறிவைச் செலுத்து அகமே ப்ரம்மம் (கோவிந்தனை நினை)
இரவும் பகலும் இன்னும் சுழலும்
கால வெள்ளம் கரைபுரண் டோடும்
மாறும் உலகின் மாயையில் மனிதன்
ஆசைக் காற்றால் அலைக்கழி கின்றான் (கோவிந்தனை நினை)
காமம் செல்வம் எனும்பா வத்தின்
கைகளில் வீழ்ந்தே மரித்திடும் மனிதா
ஞானிகள் தொடர்பெனும் தோணியின் துணையால்
பிறவித் துயரெனும் பெருங்கடல் கடப்பாய் (கோவிந்தனை நினை)
--k.balaji march 18 1990 sunday 9.00 pm--
3 comments:
FANTASTIC......EQUAL TO KANNADASAN'S BAJAGOVINDHAM......STAYING BLESSED BALETTA...
FANTASTIC........IN PAR WITH KANNADASAN'S BAJAGOVINDHAM........STAYING BLESSED.....THANKS BALETTA....
@Visali Sriram: Thank you very much for your encouragement.
Hope you are able to view other posts also in this Blog.
Post a Comment