அகரமுதல எழுத்தறி வித்தாய்
ராகம் : ஹம்ஸாநந்தி
அகரமுதல எழுத்தறி வித்தாய்
அன்னை வாணி அனைத்தும் ஆனாய்
அன்பெனும் பயிரை மனதில் விதைத்து
அருள்மழை பொழிந்து காப்பவள் நீயே (அகர)
துன்பங்கள் நீக்கி துர்க்கையும் நீயே
செல்வங்கள் சேர்த்திடும் செந்திரு நீயே
மனவளம் அருளும் மா காளி
மங்களம் பெருகும் உன்னருளாலே (அகர)
மூவகை உருவாய் மனதில் நிறைந்தாய்
முப்பெரும் செல்வம் அளித்திடும் நீ தாய்
எழுதிடப் பணித்தே ஏற்றம் அளித்தாய்
என்றென் றும்நீ என்னுள் நிறைவாய் (அகர)
கி.பாலாஜி
23.09.2019
காலை 10.30
No comments:
Post a Comment