அன்னை வாணி
ராகம்: ஆபோகி
அன்னை வாணி ஆதாரமே நீ
அறிவுச்செல்வம் ஈந்திடும் தாய் நீ (அன்னை)
இல்லை என்னும் குறையே இல்லை
இதை ஈந்தாய் நீ இதுவே எல்லை
இனிவே றேதும் கேட்பதற்கில்லை
ஈந்த வரங்களைப் போற்றுவேன் பிள்ளை (அன்னை)
உன்னருள் இருந்தால் உலகம் மலரும்
ஊன்றிய விதைதான் மரமாய் வளரும்
என்செயல் என்பது ஏதும் இல்லை
ஐயம் தீர்த்தே ஆறுதல் அளித்தாய்.
ஒன்பது நாளும் ஒவ்வோர் இரவும்
ஓதியுன் பெருமை போற்றிப் பணிந்தேன்
ஔடதமானாய் அன்பெனும் தாயே
ஆதரவளித்தே காப்பாய் நீயே (அன்னை)
கி.பாலாஜி
22.09.2019
இரவு 9.30
No comments:
Post a Comment