Face Book LIKE

Sunday, October 20, 2019

உயிர் நீ உடல் நான்

உயிர் நீ உடல் நான்.         ராகம்: ஆனந்தபைரவி

உயிர் நீ உந்தன் உடல் நான்
மனம் நீ உந்தன் மொழி நான்
உறவால் ஒன்று கலந்தோம்- இனி
பிரி வாலும் நினை வாவோம்              (உயிர்)

கருணை மனுதந்தேன் எனைக்
கடலாய் நீ கலந்தாய்
அலையாய் அலைக்கழித்தாய் - அதில்
அமுதம் என உயிர்த்தேன்                      (உயிர்)

சொல்லால் நீ சொன்னாய் -அதன்
பொருளாய் வடி வெடுத்தேன்
சுவையாய் நீ பிறந்தாய் -அதன்
சுவையை நான் சுவைத்தேன்                (உயிர்)

பிரிவின் ஓர் சுமையும்
நாம் பிரியா தினிசுமப் போம்
பிறப்பால் உறு பயனை - நாம்
ஒன்றாய் அனு பவிப்போம்                    (உயிர்)

கி.பாலாஜி
11.08.2019
காலை 10 மணி

No comments: