ராகம்: யமுனா கல்யாணி
அவனே ராமன் அவனே ராமன்
அவனே..... ஸ்ரீராமன்
ரகு குலம் தழைத்திடத் தோன்றிய மணியாம்
ரமணீய ரூபன் ரகுராமன் (அவனே)
அன்பின் உருவம் பண்பின் சிகரம்
பணிவின் பெருமை பரப்பிய புனிதம்
ராம ராஜ்யம் என்பதை நமக்கு
எடுத்துக் காட்டாய் நிறுவிய சரிதம் (அவனே)
ஆயிரக்கணக்கில் பெருமைகள் சேரும்
அவனோ அடக் கத்தின் திருவுருவம்
அவனுக்கு உயிர்களில் பேதங்கள் இல்லை
அன்பின் இனமே அவன் இனமாகும் (அவனே)
மனதைக் கொட்டிக் கவிழ்ப்போம் அவனின்
மலரிணை தனிலே இன்னொரு மலராய்
மாதவம் செய்தவர் ஆவார் அவனை
மனதால் நினைத்திடும் உயிரின மெல்லாம்
(அவனே)
கி.பாலாஜி
22.07.2020
காலை 10 மணி
No comments:
Post a Comment