Raga : Bagesree Lyrics:Balaji 20.04.2005
செந்தூர் வடிவேலா
சிந்தைநிறை பாலா
வந்தனை புரிவோரை
வாழவை க்கும்சீலா (செந்தூர்)
அந்தகாரம் நிறைந்த
அகத்தினில் ஒளி கூட்ட
அகங்காரம் செறிந்த
அறிவினைத் தெளிவாக்க
எந்தக்கா லமும்உந்தன்
அன்புக்கு நான்ஏங்க
ஏக்கங்கள் தனைப்போக்க
என்றென்றும் நீகாக்க (செந்தூர்)
மன்பதை காக்கின்ற
மந்திரம் உன்நாமம்
மங்களங்கள் நல்கும்
செந்திருப் பொற்பாதம்
வந்திடும் அடியார்க்கு
வரமருளும் நேயம்
செந்தூர்க் கடலோரம்
சேவிப்போம் திருக்கோலம் (செந்தூர்)